Monday, 8 February 2016

ஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது?

  இந்து பண்பாட்டின் படி, முறையான சடங்குகளுடன் சீரான முறையில் வழிபடாத இடங்களில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அவருக்கு அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்வது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தும். 
போலேநாத் என்று அழைக்கப்படும் சிவபெருமான் மிகவும் அப்பாவியானவர். அவரை வெகு விரைவில் குளிர்வித்து விடலாம். ஆனால், அவருடைய கோபமும் அதற்கேற்ப நன்றாக அறியப்பட்டவை.
சிவபெருமானுக்கு பிடித்தமானவை எவை?
  வெறுமையான தேவைகளுடன் எளிமையான வாழ்க்கையை வாழ்வதையே சிவபெருமான் நம்பினார் என பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

Tuesday, 2 February 2016

உங்க ராசிக்கு எந்த தொழில் ?

நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை வைத்து குறிக்கப்படும் ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த தகவல்களை அறிய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஆரம்பக் காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்த ஒரே தொழில் உளவு மட்டும் தான். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒருவரே பல தொழில் செய்து முன்னேறும் அளவிற்கு உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக மனிதர்கள் இன்று உயர்ந்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு ராசி காரர்களுக்கும் ஓர் பொதுவான குணாதிசயங்கள் இருக்கும் என்று நம்பப்படுவதை போல தான் இதுவும். நமது குணாதிசயங்கள் நமது உடல்நலம், உறவு மற்றும் தொழிலுடன் ஒத்துப் போகும்.

எனவே, இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசிக்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

Saturday, 26 September 2015

மஹாபாரதம் கதை சுருக்கம்



மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.

மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்

சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை பற்றிய சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!!

  திருப்பதி ஏழுமலையான் உலகிலேயே பணக்கார கடவுள். தங்கம், வைரம், பட்டு, பீதாம்பரம் என செல்வ செழிப்பில் செழுமையாக இருக்கும் கடவுள். கடன் தீர்க்கவும், பாவம் போக்கவும் அருள்பாலிக்கும் கடவுள் என்பதால் உலகமெங்கும் இருந்து இவரை தரிசிக்க எண்ணற்ற அளவில் வருடம் முழுவதும் பக்தர் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.
 
  தங்களின் லாபத்தில் பங்கு அளித்தது போக, இப்போது தங்கள் கம்பெனியின் ஷேர்களை எல்லாம் கூட ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள் பெரும் செல்வந்தர்கள். இவரை தரிசிக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும், அபிஷேகம் செய்ய வேண்டும் எனில் வருட கணக்கில் காத்திருக்க வேண்டும்.
 

  ஆக மொத்தத்தில் ஏழுமலையான் ஏழைகளின் பசியை தீர்க்கும் கடவுள் மட்டுமல்ல, ரொம்ப பிஸியான கடவுளும் கூட. இனி திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை மற்றும் கோவிலை பற்றிய சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பற்றி காணலாம்....

Thursday, 2 July 2015

இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்!


நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு 




வட/தென் துருவ உந்துதலின் காந்த மற்றும் மின்னாற்றலுக்குரிய அலை விநியோகங்களால் நேர்மறையான ஆற்றல் திறன் அதிகமாக இருக்கும் இடத்தில் மூலோபாய முக்கியத்துவத்துடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் மையப்பகுதியில் தான் மூலவரின் சிலை. இந்த இடத்தை கர்பாக்ரிஹா அல்லது மூலஸ்தானம் என அழைப்பார்கள். சொல்லப்போனால்

Saturday, 27 June 2015

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?




வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்

---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்

என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.

"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: